Advertisment

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

karur manmangalam taluk office govt free patta issue

கரூரில் அரசின் இலவச வீட்டுமனைபட்டாவழங்கக் கோரிபொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisment

கரூர் மாவட்டம் மண்மங்கலம் கிராமம் அண்ணா நகர், ராமேஸ்வரபட்டி, சுழியம்பாளையம், சிவியாம்பாளையம்மற்றும் பிசி காலனி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை முறையிட்டும் பலன் இல்லாததால் மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மண்மங்கலம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏப்ரல் பத்தாம் தேதி இந்த பிரச்சனை குறித்து சுமூக முடிவு எடுக்கலாம் எனத்தெரிவித்ததைத்தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

Advertisment

போராட்டத்திற்கு வாங்கல் காவல் நிலைய போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த காத்திருப்புப் போராட்டத்தை சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் பொதுமக்களுடன் இணைந்து நடத்தினர்.

karur police taluk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe