குளித்தலை இரட்டை கொலை தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிகாரிகளின் மெத்தனப்போக்கு தான் நீர் நிலை ஆக்கிரமிப்புகளுக்குக் காரணம் என்று கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை எடுத்துக்கொண்டதால் தமிழக போலீஸ் மீது எதுவும் பிரச்சனை வரும் என்று தெரிந்த டிஐஜி இரட்டை கொலை வழக்கில் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என கூறி குளித்தலை காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

karur kuliththalai incident  six person arrested in police and investigate

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை. இவரது மகன் நல்லதம்பி. விவசாயிகளான இவர்கள் தோட்டத்தில் பூச்செடிகளை பயிரிட்டு விற்பனை செய்து வந்தனர். இவர்கள் அப்பகுதியில் இருந்த குளத்தின் 39 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த நில ஆக்கிரமிப்பாளர்கள் வீரமலை, நல்லதம்பி மீது முன்விரோதத்தில் இருந்தனர். கடந்த ஜூலை 29-ஆம் தேதி இருவரையும் சசிகுமார், ஜெயகாந்தன், பெருமாள் உள்ளிட்ட 6 பேர் அரிவாளால் வெட்டி கொன்றனர். தந்தை, மகன் இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே முதலைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (36), பிரபாகரன் (27), கவியரசன் (34), சசிகுமார் (34), ஸ்டாலின் (22), சண்முகம் (34) ஆகியோர் மதுரை மாவட்ட 6 ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனர்.

karur kuliththalai incident  six person arrested in police and investigate

Advertisment

இதற்கிடையே இருவர் கொல்லப்பட்டது தொடர்பாகச் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகளின் மெத்தனப் போக்கே நீர் நிலை ஆக்கிரமிப்புகளுக்கு காரணம் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம் வீரமலை, நல்லதம்பி கொல்லப்பட்டது குறித்து குளித்தலை டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் முதலைப்பட்டி குளத்தின் மொத்த அளவு என்ன? எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக வருவாய் அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 14- ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் நேற்று கொலை தொடர்பாக திருச்சி கோர்ட்டில் சரணடைய பிரவீன் குமார் மற்றும் ஒருவர் வந்தனர். இதில் பிரவீன்குமார் மட்டும் சரணடைந்தார். மற்றொருவர் தப்பியோடி விட்டார். அவர் தப்பிக்க இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியது. இந்த வழக்கில் பிரவீன்குமார் ஏற்கனவே கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்டவர், பணத்திற்காக கொலை செய்ய கூடியவன் என்பது தெரிந்தும் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் இந்த விசயத்தில் சரியாக விசாரிக்கவில்லை என்பது தெரிந்ததும் உடனே டிஜஜி பாலகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.