karur kulithalai tasmac shop incident viral video

Advertisment

டாஸ்மாக் கடை ஒன்றில் இலவசமாக மதுபானம் கேட்டு, பீர் பாட்டிலை உடைத்து தகராறில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ளகோவக்குளத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 43). இவர் பழைய ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு பணியில் இருந்த போது அங்கு வந்த குப்புரெட்டிபட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ், பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மனோகரன் ஆகிய இருவரும் பணம் கொடுக்காமல் இலவசமாக மதுபானம்கேட்டுள்ளனர். அதற்கு சூப்பர்வைசர் பணம் இல்லாமல் தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால்அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து பீர் பாட்டிலை கடையின் முன்பு உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.

மேலும், இது குறித்த வீடியோவை டாஸ்மாக் சூப்பர்வைசர் ரகசியமாக பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து டாஸ்மாக் சூப்பர்வைசர் பாலகிருஷ்ணன் மாயனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் இன்று இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.