கரூர் குளித்தலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்

karur kulithalai rathnagiriswarar temple donation counting work 

கரூர் குளித்தலை அருகே உள்ள புகழ்பெற்ற அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை 6 மாதத்திற்கு பிறகு இன்று மதியம் மலையடிவாரம் நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள வைரபெருமாள் சன்னிதானம் மற்றும் விநாயகர் சன்னிதானம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை கரூர் தான்தோன்றி மலை உதவி ஆணையர் நந்தகுமார் முன்னிலையில் திறக்கப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் அய்யர்மலையில் உள்ளடாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவமாணவியர்கள் 60 பேர்ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணியில் ஆய்வாளர் கனிகுமார்,கோவில் செயல் அலுவலர் அனிதா, கல்லூரி என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர்கள்பெரியசாமி, புவனேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

karur temple
இதையும் படியுங்கள்
Subscribe