Advertisment

எல்கை பந்தயம்; சீறிப் பாய்ந்த குதிரைகளும் காளைகளும்

karur kulithalai bullock elkai race competition 

Advertisment

கரூர் மாவட்டத்தில் தை மாத பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் எல்கை பந்தயம் நடைபெற்றதில், போட்டியாளர்கள் பலரும் உற்சாகமாககலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் ஊர் பொதுமக்கள் சார்பில் தை மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாடு, குதிரை, சைக்கிள் ஆகியவற்றிற்கான மாபெரும் எல்கை பந்தயம் போட்டி நடைபெற்றது. இதில் மாடுகளுக்கான சிறிய மாடு, ஒத்தை மாடு, இரட்டை மாடு, மொத்தம் 20 வண்டிகள், 20 குதிரைகள் ,புதிய குதிரை, பெரிய குதிரை, சைக்கிள் ரேஸ், 1500 மீட்டர் பந்தயத்துக்கு பத்துக்கு மேற்பட்ட உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்த எல்கை பந்தயப் போட்டியில் காளைகள் மற்றும் குதிரைகள் எல்லைக்கோட்டில் இருந்து சீறிப்பாய்ந்தன.

சிறிய மாட்டிற்கு 5 மைல் தூரம், பெரிய மாட்டிற்கு 6 மைல் தூரம், இரட்டை மாட்டிற்கு 8 மைல் தூரம், சிறிய குதிரைக்கு 10 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற குதிரை மற்றும் மாடு, சைக்கிள் ஆகியவற்றிற்கு பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற குதிரைகளுக்கும், மாட்டு வண்டி வீரர்களுக்கும், சைக்கிள் வீரர்களுக்கும் பரிசுத் தொகைகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

horse karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe