Advertisment

வருமான வரித்துறை; 10 திமுகவினர் கைது

karur income tax raid related issue 10 dmk members involved

Advertisment

கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளைப்பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் திமுக கவுன்சிலர்கள் உட்பட 10 பேர் கைது செய்து சிறையில் அடைத்ததுதிமுகவினரிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் கடந்த 26 ஆம் தேதி சோதனை நடத்த வந்த வருமான வரித்துறையினரிடம் அடையாள அட்டை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திமுகவினர் அவர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தனர். இது சம்பந்தமாக நேற்று பதியப்பட்ட வழக்கில் இன்று ஒரே நாளில் 15 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக கவுன்சிலர்கள் 20வது வார்டு லாரன்ஸ், 16வது வார்டு பூபதி, முன்னாள் கவுன்சிலர் ஜோதிபாசு உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க கரூர் போலீசார் அவர்களை அழைத்துச் சென்றனர். அதேபோன்று, ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் சுப்பிரமணி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்ட போது தகராறில் ஈடுபட்ட செல்வம் என்பவரை தாந்தோன்றிமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். 10 பேரை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார், மீதமுள்ள நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரில் ஆளும் கட்சி கவுன்சிலர்களே கைது செய்யப்பட்ட சம்பவம் திமுக நிர்வாகிகளுக்குஇடையே அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe