ஆட்டை தாக்கிய மர்ம விலங்கு; பொதுமக்கள் அச்சம்

karur goat incident unknown animal

கரூர் மாவட்ட எல்லையான புகழுர் அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வரும் ஆட்டை மர்ம விலங்கு ஒன்று கடித்து விட்டுத்தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில்மாவட்ட வனச்சரகர் உத்தரவின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் ஆய்வினை மேற்கொண்டுஅங்கேயே முகாமிட்டுள்ளனர்.

மேலும் குப்பம், அத்திப்பாளையம், முன்னூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சிறுத்தைப் புலி வந்திருக்குமோ என்ற அச்சத்தில்எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் பகுதியில் பல நாட்களாக வனத்துறையினரிடம்சிக்காமல் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி வந்த நிலையில், அந்த சிறுத்தைப் புலி தற்போது காவிரி ஆற்றின் வழியாக கரூர் மாவட்ட எல்லையான அத்திப்பாளையம் பகுதிக்கு வந்திருக்குமாஎன்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் சிறுத்தைப் புலி வந்திருக்குமோ என்ற அச்சத்தில்பீதி அடைந்துள்ளனர்.

goat karur namakkal
இதையும் படியுங்கள்
Subscribe