கரூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (16/12/2020) ஆய்வு மேற்கொள்கிறார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் ரூபாய் 627 கோடி மதிப்பிலான 2,089 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூபாய் 118.53 கோடியில் முடிவுற்ற 28 திட்டங்களைத் தொடங்கி வைத்து ரூபாய் 35 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.