Skip to main content

வழக்கில் சிக்கவைக்கத் துடிக்கும் காவல்துறை; குற்றம் சாட்டும் கொலை குற்றவாளி

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

karur district police against issue meet collector 

 

திருச்சி மாவட்டம் சர்க்கார்பாளையம் பனையக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு சரியான வேலை கிடைக்காததால், அப்போது தவறான நண்பர்களின் சேர்க்கையால் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இவர் பல்வேறு கொலைக்குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறைவாசமும் அனுபவித்துள்ளார். பல்வேறு வழக்குகளும் இவர் மீது தற்போது வரை நிலுவையில் உள்ளன. இதில் காவல்துறையால் புனையப்பட்ட வழக்குகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் ஆர்த்திகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் சராசரி மனிதரைப் போல தானும் வாழ வேண்டும் என நினைத்து குற்றச்செயல்களை முற்றிலுமாக தவிர்த்து மனம் திருந்தி தற்போது வாழ்ந்து வருகிறார்.

 

இதனிடையே, தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறார். அதில் சில வழக்குகளில் குற்றவாளி இல்லை என நிரூபணம் ஆகி நீதிமன்றம் விடுவித்துள்ளது. மீதமுள்ள வழக்குகளிலும் குறிப்பிட்ட நாட்களில் ஆஜராகி வருகிறார். இந்நிலையில், கடந்த வருடம் காவல்துறையினர் ஜெகதீஷ் மீது பொய்யான வழக்கு ஒன்றை புனைந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான விசாரணையில் 7 மாதத்திற்கு பிறகு குண்டர் சட்டத்தில் வழக்கு போடுவதற்கு முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் இவரை விடுவித்தது. இந்த சூழலில் மீண்டும் ஜெகதீஷை கைது செய்து வழக்குகளில் சிக்க வைக்க வேண்டும் எனவும், ஜெகதீஷின் கை, கால்களை உடைக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் திட்டமிட்டு தன்மீது பொய்யான வழக்குகளை சித்தரிக்க முயல்வதாக கூறி, அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்க கரூர் மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சந்திக்க அவரது தாயார் மற்றும் மனைவியுடன் வந்திருந்தார்.

 

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் குற்றவாளியான ஜெகதீஷிடம் மனுவை பெறுவதற்கு தயக்கம் காட்டியதோடு மனுவை தனது உதவியாளரிடம் அளிக்கக் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளரிடம் ஜெகதீஷ் பேசுகையில், "கடந்த காலத்தில் நான் செய்த குற்றச்செயலுக்காக இன்று வரை குற்றவாளியாக உள்ளேன். இது தொடர்பாக ஏற்பட்டுள்ள வழக்குகளில் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். நான் இப்போது திருமணம் செய்து கொண்டதால் சராசரி மனிதனாக வாழ விரும்புகிறேன். ஆயினும் காவல்துறையினர் என் மீது ஏதேனும் புகார் கூறி என்னை வழக்குகளில் சிக்க வைக்க திட்டமிடுவதோடு எனது கை, கால்களை உடைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

 

ஏற்கனவே குற்றச்செயலில் ஈடுபட்ட போது என் கை, கால்களை மூன்று முறை உடைத்துள்ளனர். தற்போது நான் மனிதனாக வாழ நினைக்கும் நேரத்தில் காவல்துறையினர் வேண்டுமென்றே திட்டமிட்டு தொடர்ந்து எனக்கு மன உளைச்சலை அளித்து வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட வந்தேன். நான் வசித்த பகுதி திருச்சி என்பதால், திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஆலோசனை கூறினார். திருச்சியில் பல்வேறு வழக்குகள் இருப்பதால் அங்கு நான் வசிப்பது சரியாக இருக்காது எனக் கருதி என் மனைவியுடன் நான் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். அங்கும் காவல்துறையினர் தொடர்ந்து என்னை கண்காணித்து தொந்தரவு செய்து வருகின்றனர். சராசரி மனிதனாக திருந்தி வாழ நினைக்கும் எனக்கு அரசும், அரசு துறை அதிகாரிகளும் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.