Advertisment

அமைச்சர் துணையுடன் மண் திருட்டு!

Advertisment

கரூர் நகரப் பகுதியில் உள்ள உப்பிடமங்களம் குளத்தில் சட்டவிரோதமாக சவுடுமண் தொடர்ந்துதிருடப்பட்டு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதில் 13 மாவட்டங்களில் சவுடு மண், கிராவல் மண் எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக பட்டா நிலம் என்றாலும், சவுடு மண் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் வெளிப்படையாக உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை துளியும்மதிக்காமல், கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சவுடு மண் திருடப்படுகிறது.

பெரும்பாலும் இந்த மண், கரூரில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தில்கொட்டப்பட்டு வருகிறது. புதிய பஸ் நிலையம் கட்ட தனியாக ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்ததாரருக்கு அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அனைவரும் உடந்தையாக இருப்பதால், மண் வளம் கொள்ளையடிக்கப்படுகிறது. இவை அனைத்தும் போக்குவரத்துத் துறை அமைச்சரான விஜயபாஸ்கரின் துணையோடு நடத்தப்படுகிறது என கரூர் ர.ர.க்களே கூறுகிறார்கள்.

minister sand karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe