Advertisment

கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்

karur district collector launched summer games camp 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கரூரை அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்த முகாமில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஜூடோ, மல்யுத்தம் உள்ளிட்ட 7 விளையாட்டுகள் 15 நாட்கள் நடைபெற உள்ளன. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் என 254 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.

Advertisment

தொடக்க விழாவின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர் உமா சங்கர் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர். ஆட்சியர் பிரபு சங்கர் ஒவ்வொரு போட்டிகளையும் தனித்தனியாகத்தொடங்கி வைத்து, பயிற்சியில் பங்கேற்றவர்களைப் பாராட்டிச் சென்றார். மாணவ மாணவிகளுடன் சேர்ந்து விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மல்யுத்த பயிற்சியில் சிறப்பாக விளையாடிய பள்ளி மாணவர்களைப் பாராட்டினார்.

camp summer karur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe