Advertisment

வளர்ச்சி திட்ட பணிகள்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

karur district collector inspection village panchayat 

Advertisment

கரூர் அருகே கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வடவம்பாடி ஊராட்சி, கீரனூர் ஊராட்சி, பண்ணைப்பட்டி ஊராட்சி மற்றும் தென்னிலை ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டவடவம்பாடி ஊராட்சிக்குஉட்பட்ட முத்தம்பட்டி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.90 மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்து அனைத்து வீடுகளுக்கும் முறையான சரியான நேரத்தில் குடிநீர் வழங்கவும், பொதுமக்கள் தேக்கி வைக்கும் குடிநீர் தொட்டியினை கொசு புழுக்கள் உருவாகாத வண்ணம் மூடி வைக்க அறிவுறுத்த வேண்டும். மேலும், குடிநீர் தேக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஆய்வு செய்து எவ்வளவு நாளுக்கு ஒரு முறை குளோரினேசன் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தம் செய்யப்படும் கால நேரத்தை குறிப்பிட்டு வைக்குமாறு அலுவலருக்கு அறிவுறுத்தினார். தனிநபர் கழிப்பறையினை ஆய்வு செய்தார். தொடர்ந்து வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை சார்பில் பார்வையற்றோர், மாற்றுத்திறனாளி ஜெகஜோதி இலவச வீட்டு மனையினை வழங்கினார்கள்.

மேலும், பூங்காறு வாரியை சீர் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 5.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வடவம்பாடி முதல் கரட்டுப்பட்டி வரை பூங்காறு வாரியில் நீர் உறிஞ்சு குழி அமைக்கும் பணிகளையும், வெள்ளப்பட்டி ஊராட்சி வேலாயுதம்பாளையம் கிராமத்தில் ரூ.38.65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தாய் சேய் நலவிடுதி கட்டடப் பணிகளை பார்வையிட்டு கட்டடங்கள் கட்டுவதற்கு பயன்படும் செங்கல் தரம் குறித்துஆய்வு மேற்கொண்டார்.

Advertisment

கீரனூர் ஊராட்சி உடையாப்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 5.89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிநபர் உறிஞ்சுக்குழி பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 42.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி செயலகம் கட்டடப் பணிகளையும்,தென்னிலை ஊராட்சி கீழ சக்கரக்கோட்டை கிராமத்தில் பாரத பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன் 2.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டின் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, ராஜேந்திரன், கடவூர் வட்டாட்சியர் வெங்கடேஷ், ஊராட்சி மன்றத்தலைவர்கள் மகாலட்சுமி, கோபாலகிருஷ்ணன், பெரியசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

inspection karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe