Advertisment

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம்; விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்

karur district collector flagging for college students rally

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ஆம் தேதி முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று (15.06.2023) கரூரில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Advertisment

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதற்கு முன்னதாக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Advertisment

விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டகல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு பேரணியாக சென்றனர். இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி தாந்தோணிமலை அரசு கலை கல்லூரி வாயில் முன்பு நிறைவடைந்தது. இந்த பேரணியில் கல்லூரி மாணவிகள், அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

karur rally
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe