Advertisment

குழந்தையை பராமரிப்பதில் தம்பதிகளிடையே சண்டை; மனைவி தற்கொலை 

karur district child care issues between husband and wife

Advertisment

கரூர் மாவட்டம் புகளூர் அருகே உள்ள நொய்யல் குறுக்குசாலை பங்களா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சிவபிரகாஷ் (வயது 28). இவரது மனைவி நர்மதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு ஒரு வயதில் மகனும், ஆறு மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் 2-வதாக பிறந்த பெண் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது மற்றும் பராமரிப்பதில் அடிக்கடி கணவன் மனைவி இடையேசண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் நர்மதா விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது அறையில் தனியாக இருந்த நர்மதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தசிவபிரகாஷ் குடும்பத்தினர், இதுகுறித்து நர்மதாவின்தங்கை பிரேமாவிற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரேமா மற்றும் அவரது உறவினர்கள் நர்மதாவின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பிரேமா, வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரில், "தனது சகோதரியின் சாவில் சந்தேகம் இருப்பதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்மதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நர்மதா தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார்தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நர்மதாவுக்கும் சிவபிரகாஷ்க்கும் திருமணம் நடைபெற்று சில ஆண்டுகளே ஆவதால் நர்மதா தற்கொலை செய்து கொண்டது குறித்து கரூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

karur police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe