எஸ்.வி.சேகர் ஜூலை-5 நேரில் ஆஜராக வேண்டும்! - கரூர் நீதிமன்றம்

sv sekar

நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ம் தேதி ஆஜராக வேண்டும் என்று கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக முகநூலில் பதிவிட்ட நகைச்சுவை நடிகர் எச்.வி. சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் தலித் பாண்டியன் என்பவர் கடந்த 23ம் தேதி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

நடிகர் எஸ்.வி.சேகர் மீது 294 பி. 506 ( 1 ), 500, 509, 153, 153 A, 153 B, தகவல் தொழில் நுட்ப பிரிவு 67 உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்ட இந்த வழக்கு இன்று குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

முதல் கட்ட விசாரணை கடந்த 15ம் தேதி தொடங்கியது. இரண்டு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்கு பிறகு வரும் மே 18ம் தேதி நடிகர் எஸ்.வி.சேகருக்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும் என நீதிபதி சுப்பையா கூறியிருந்தார்.

அதன்படி இன்று இந்த வழக்கு தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ம் தேதியன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.

court karur SV Segar
இதையும் படியுங்கள்
Subscribe