karur court judgement 20 year jail pocso act case

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் நிலைய சரகத்தில் உள்ள முதலியார் தெருவில் கடந்த 07.09.2021 ஆம் தேதி 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உமர் முக்தர் (47) என்பவர் மீது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார்சின்னதாராபுரம் காவல் நிலையத்தில்புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் உமர் முக்தரைகைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு தொடர் விசாரணையில் இருந்து வந்தது.

Advertisment

இந்நிலையில் இவ்வழக்கில்உமர் முக்தர் குற்றவாளி என முடிவு செய்து அவருக்கு20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 2,000/- அபராதமும் விதித்தும்மகிளா நீதிமன்றம்உத்தரவிட்டது. அத்துடன் அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 வருடம் மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

Advertisment