Karur court granted bail to savukku Shankar

Advertisment

பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததால், கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பல பகுதிகளில் இருந்து அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுத் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரூ.7 கோடி மோசடி செய்த விவகாரம் தொடர்பாககரூர் பிரியாணி கடை உரிமையாளர் கிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரத்தில் சவுக்கு சங்கர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவரை 4 நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து 4 நாட்கள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு கரூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சவுக்கு சங்கருக்கு ஆதரவாக வழக்கறிஞர் கரிகாலன் இந்த வழக்கை நடத்தி வந்தார்.

இந்தச் சூழலில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி பரத் குமார் சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.