karur corporation tax issue two persons arrested 

மாநகராட்சி ஊழியர்களை மது போதையில் தாக்கிய வீட்டு உரிமையாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Advertisment

கரூர் மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி போன்ற நிலுவைத்தொகைகளை 15.12.2022-க்குள்செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் வரி நிலுவை வைத்திருப்பவர்கள் பெயர் பட்டியல் கரூர் மாநகராட்சி இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியிடப்படும் எனக் கடந்த 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதன்படி கரூர் மாநகராட்சிக்குஉட்பட்ட தெற்கு காந்திகிராமம் பகுதியில் வரி செலுத்தாமல் நிலுவைத் தொகை வைத்துள்ள 100 குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது சீனிவாசன் என்பவரது வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களைசீனிவாசன் மற்றும் அவரது மகன் செந்தில்குமார், மணி ஆகிய மூன்று பேரும்சேர்ந்துதாக்கியுள்ளனர். செந்தில்குமார் மற்றும் மணி ஆகிய இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்குத்தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக அப்பகுதிக்கு வந்து பார்வையிட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் ரவி, வருவாய் அலுவலர் குழந்தைவேல் ஆகியோர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் நடந்த சம்பவம் குறித்துக் கூறினர். அதனைத் தொடர்ந்து ஆணையர் உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் ரவி தாந்தோணிமலை போலீசாருக்குதகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாநகராட்சி அதிகாரிகளின்புகாரைஏற்று, ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சீனிவாசன் மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் தப்பியோடிய மணி என்ற நபரைத்தேடி வருகின்றனர்.