Advertisment

இருந்த கட்சியை விமர்சித்து பா.ஜ.கவில் இடம்பிடிக்க நினைக்கிறார் குஷ்பு-எம்.பி.ஜோதிமணி விமர்சனம்!  

karur congress mp jothimani

காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பா.ஜ.கவில் இடம்பிடிக்க நினைக்கிறார் குஷ்பு என கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி விமர்சித்துள்ளார்,

Advertisment

இது குறித்து டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த எம்.பி.ஜோதிமணி, ''இப்படி ஒரு அவதூறுசெய்துதான் பி.ஜே.பியில் பெயர் எடுக்க வேண்டும் என குஷ்பு நினைப்பது துரதிஷ்டவசமானது.எப்பொழுதுமே நாம் ஒரு கட்சிக்கு செல்கிறோம் என்றால் அந்தக் கட்சிக்கு எதையாவது கொண்டு போக வேண்டும். நம் மூலமாக தொண்டர்கள் அந்த கட்சிக்கு கிடைக்க வேண்டும். இப்படி ஏதாவது ஒரு லாபம் இருக்க வேண்டும். மற்ற கட்சியைதிட்டுவது தான்,அதுவும் நீங்கள் ஆறு வருடமாகஇருந்த கட்சியை திட்டுவது தான் உங்களுக்கு பி.ஜே.பியில் ஒரு இடத்தை கொடுக்கும் என குஷ்பு நினைப்பது ஒரு மோசமான அரசியல் சூழல்''எனக் கூறினார்.

Advertisment

kushboo congress jothimani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe