Published on 28/05/2023 | Edited on 28/05/2023

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய மற்றும் அவருடைய சகோதரர் மற்றும் நண்பர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் சோதனையானது தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில் முதல்நாள் சோதனையின் பொழுது சில இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் தாக்குதல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் ஒரு திமுக கவுன்சிலர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக கவுன்சிலர் பூபதி உட்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.