Skip to main content

மாணவிகள் நலனில் உதிரம் உயர்த்துவோம் திட்டம் 

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

karur collector prabhushankar uthiram uyarthuvom scheme 

 

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும்‌ 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஏற்கனவே ரத்த முன்மாதிரி எடுக்கப்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் 16 வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு அதில் இரத்த சோகை உள்ள மாணவிகளைக் கண்டறிந்தனர். பரிசோதனையின் அடிப்படையில் மூன்று பிரிவாகப் பிரித்து  சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று வண்ணங்களில் அட்டைகள் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

 

இதில்  ரத்த சோகை உள்ள மாணவிகள்  குணமடையவும் சோர்வின்றி நல்ல உடல் நலத்துடன் கல்வி கற்க ஏதுவாக கரூர் மாவட்டத்தில் இரத்த சோகை கட்டுப்பாட்டு இயக்கம் மூலம் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழகத்தில் முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்ட இத்திட்டத்தினை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது, "தமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தமிழ்நாடு முதல்வரின் வாக்கியத்திற்கு ஏற்ப பள்ளியில் பயிலும் மாணவிகள் ரத்த சோகை நோயினால் சோர்வடைந்து, பலவீனத்தால் கல்வி கற்க முடியாமல் இருப்பதை தவிர்க்கவும், எதிர்காலத்தில் நலமுடன் வாழவும் வழிவகை செய்யும் வகையில் அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்தினை மேம்படுத்தி இரத்த சோகையில் இருந்து மீள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழிகாட்டுதலின்படி இத்திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளோம்.

 

கரூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் மாணவியர்களிடையே அவர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று 17,000 மாணவியர்களிடையே ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் பரிசோதனை மேற்கொண்டு இரத்த சோகை உள்ள மாணவியர்களுக்கு கடந்த ஜனவரி 25 ஆம் தேதி கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இன்று குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகை நோய் அதிகமாக கண்டறியப்பட்ட மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி உள்ளோம். இதன் மூலம் ரத்த சோகையை  ஆரம்ப நிலையிலேயே  கண்டறிந்து சரி செய்வதன் மூலம் மாணவிகள் நல்ல திடமான உடல் நலமும் திறனறிவும் பெறுவர். மேலும் நல்ல கண் பார்வையும், படிப்பில் அதிகம் கவனம் செலுத்துவர்" எனப் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.