Advertisment

50 பைசாவிற்கு காபி; கடையில் குவிந்த மக்கள்

50 பைசாவிற்கு காபி; கடையில் குவிந்த மக்கள்

Advertisment

கரூர் மாநகராட்சிகு உட்பட்ட கே.வி.பி நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் கண்ணா, ரேணுகாதேவி என்ற இளம் தம்பதியினர், கரூர் கோவை சாலையில் 80’ஸ் காபி கிளப் என்ற பெயரில் காபி கடையைகடந்த ஓராண்டு காலமாக நடத்தி வரும் நிலையில், இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஒன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டும் இன்று ஒரு நாள் ஆஃபராக காபி 50 பைசா மட்டுமே என்று அறிவித்ததை அடுத்து மக்கள் கூட்டம் அப்பகுதியில் குவிந்தனர்.

செல்லாக்காசு ஆன பழைய 50 பைசாவிற்கு ஒரு காபி இலவசம் என்ற அறிவிப்பு ஒருபுறம் இருப்பினும், மக்கள் கைகளில் அந்த நாணயம் தென்பட்டு பல வருடங்களாகிறது. மற்ற நாட்களில் 15 ரூபாய்க்கு விற்பனையாகும் காபி இன்று ஒரு நாள் மட்டும் 50 பைசா மட்டும் என்பதினால் கல்லாவில் வெறும் 50 பைசா மட்டுமே குவிந்தது. இதுமட்டுமில்லாமல், கொளுத்தும் வெயிலாக இருந்தாலும் கரூர் மாநகராட்சிகளில் உள்ள டீக்கடைகள் மற்றும் காபி கடைகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்த வண்ணம் இருக்கும்.

இந்த சமயத்தில் வெறும் 50 பைசாவிற்கு15 ரூபாய் மதிப்பிலான காபி கொடுக்கப்பட்ட சம்பவமும், அதனை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்த சம்பவமும் தமிழக அளவில் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரேணுகாதேவி முதுகலை பட்டதாரியான இவர் காபி கடை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

karur coffee
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe