
கரூரில் மாயனூர் கதவனை அருகே காவிரி கரையில் உள்ள வடிகால் சிறு பாலம் உடைந்திருக்கும் நிலையில் ஆபத்தை உணராமல் தடுப்புகளை தாண்டி பொதுமக்கள் செல்லும் போக்கு நிலவுகிறது.
கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை அருகே மாயனூரிலிருந்து கட்டளை செல்லும் காவிரி கரையில் உள்ள கும்பகுழி வடிகால் பாலம் இடிந்துள்ள நிலையில் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாயனூரில் இருந்து மேலமாயனூர், கட்டளை, ரங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரண்டு அரசு பேருந்துகளின் வழித்தடம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இருபுறங்களிலும், பொதுப்பணித்துறையினர் சார்பில் தடுப்புகள் அமைத்துள்ளனர். அதையும் மீறி மாணவர்கள், பொதுமக்கள் தடுப்புளை தாண்டி செல்வதால் பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.