
தமிழக முதல்வரை விமர்சித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய கரூர் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரை சேர்ந்த பாஜக நிர்வாகி விக்னேஷ் என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். முனியப்பனூர் வீட்டிலிருந்த பாஜக நிர்வாகி விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அண்மையில் முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றபொழுது அவர் உடுத்தியிருந்த உடை குறித்து அவதூறு பரப்பியதாக எடப்பாடியை சேர்ந்த பாஜக பிரமுகர் அருண் பிரசாத் என்பவரும், திருமணவிழாவில் முதல்வரை விமர்சித்ததாக பா.ஜ.க.வின் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சார அணித் தலைவா் ஜெயிரகாஷ் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us