Skip to main content

படித்த கல்லூரிக்கு சென்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி! 

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆவார். இவர் தன்னுடைய பள்ளி, கல்லூரி நாட்களிலே அரசியலில் ஈடுபட்டு கட்சியில் மாணவர் அணி செயலாளர், மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ, அமைச்சர் என்று அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றார். அதிமுக- திமுக என தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளிலும் தன்னுடைய நிலையை நிறுத்திக் கொண்ட செந்தில்பாலாஜி தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமான கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி 23 ஆண்டுகள் கழித்து தான் படித்த கல்லூரிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

He was educated 23 years later Former minister Senthil Balaji went to college



 

கரூர் அரசு கலைக் கல்லூரியில் 1993- 96 ஆம் ஆண்டுகளில் பயின்ற முன்னாள் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக கரூர் மக்களவைத்தொகுதி உறுப்பினர் செ.ஜோதிமணி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி படிப்பு காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரான வி.செந்தில்பாலாஜி தனது கல்லூரி கால நண்பர்களுடன் கலந்துரையாடினார். 
 

இந்த நிகழ்ச்சியில், அப்போதைய பேராசிரியர்களான நடேசன், பழனிசாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். பிறகு முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.