​   ​colector karur

கரூர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் கார் டிரைவராக பணியாற்றி வந்த பரமசிவம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு பாராட்டி பேசியபோது, கடந்த 35 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்று செல்லும் பரமசிவத்தின் பணி உண்மையிலே மிகவும் பாராட்டப்பட வேண்டியது. எப்படி என்றால் மகாபாரதத்தில் கடவுள் கண்ண பிரானே அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து வழிநடத்தினாரோ? அப்படியே டிரைவராக அலுவலர்களை மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்கி பாதுகாப்பான பயணத்தை கொடுத்துள்ளார்.

சரியான நேரத்தில் சாலை விதிகளை மதித்து இரவு பகல் என பாராமல் பயணம் சிறப்பாக முடித்தார். அவ்வாறு உதவியாக இருந்த வாகன ஓட்டுநருக்கு இன்று ஒருநாள் நானே அவருக்கு ஓட்டுநராக இருந்து வழியனுப்பி வைக்கிறேன் என விழா முடிந்ததும் யாரும் எதிர்பாராத வகையில், பரமசிவத்தையும், அவரது மனைவியையும் தனது காரின் பின் இருக்கையில் அமர வைத்த கலெக்டர் அன்பழகன், திடீரென அவரே காரை ஓட்டிக் கொண்டு பரமசிவம் இல்லத்திற்கு அழைத்து சென்றார். இதைப் பார்த்த பொது மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

Advertisment

colector_Karur

பரமசிவம் வீட்டிற்கு சென்றதும் டீக்குடித்து விட்டு அவரது குடும்பத்தினருடன் கலெக்டர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் என்ன உதவிகள் வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என்று சொல்லிவிட் அங்கிருந்து புறப்பட்டார்.

Advertisment

இதேபோல் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி மூக்கணாங்குறிச்சியில் நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் பங்கேற்க சென்ற கலெக்டர் அன்பழகன், திடீரென சின்னமநாயக்கன்பட்டி கிராமத்திற்கு சென்றார்.

அங்கு வயது முதிர்வாலும், உடல் உழைப்பின்மையாலும் வறுமையில் வாடிய மூதாட்டி ராக்கம்மாள் (வயது 82) வசிக்கும் ஓலைக்குடிசை வீட்டிற்கு சென்றார். சற்றும் எதிர்பாராத மூதாட்டிக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தான் எடுத்து வந்த உணவை அவருக்கும் பரிமாறி, தானும் சாப்பிட்டார்.

karur

அத்துடன் மாதந்தோறும் கிடைக்கும் அரசின் உதவித் தொகையான ரூ.1000 வழங்குவதற்கான ஆணையையும் உடனடியாக வழங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனின் அடுத்தடுத்த மனிதநேயம் மிக்க செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரை எதிர்த்து மக்கள் வெகுவாக போராடி மக்கள் அரசியல்வாதிகள் மீது மக்கள் வெறுப்புணர்வு அதிகரித்து வரும் இந்த நேரத்தில் கரூர் கலெக்டரின் மனிதநேய செயல் பொதுமக்களுக்கு ஆறுதலான விசயமாக இருக்கிறது.