‘கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் 'கந்த சஷ்டி கவசம்' குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாருக்கு பிறகுகறுப்பர் கூட்டம்யூடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் குறித்தசர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்போது மேலும் இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த சர்ச்சை வீடியோ குறித்து சுரேந்திரன்,செந்தில்வாசன் ஆகியஇருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் சோமசுந்தரம், குகன்ஆகிய இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார்தற்பொழுதுகைது செய்துள்ளனர்.இந்தப் புகாரில்கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கசைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில்உள்ள அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே யூடியூப் தலைமைக்கு காவல்துறைகடிதம் அளித்திருந்த நிலையில் தற்பொழுது வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது.