சீமானுக்கு கருங்கல்பாளையம் போலீசார் சம்மன்

karungalpalayam Police summon Seaman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான மேனகாவை ஆதரித்து கடந்த மார்ச் 13 ஆம் தேதி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், அருந்ததியினர் சமூகம் குறித்து பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட புகாரின் பேரில் போலீசார் சீமான் மீது கடந்த மார்ச் 22 ஆம் தேதி எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் சீமான் செப்டம்பர் 9 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீமானிடம் இந்த சம்மன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Erode seeman
இதையும் படியுங்கள்
Subscribe