udhayakumar

Advertisment

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் நுங்கம்பாக்கம் காவல்நிலைய போலீசார்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர், போலீசாரை மிரட்டும் விதமாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, கருணாஸ் பேச்சு குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Advertisment

மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், கருணாஸ் அதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை எவ்வாறு கையாளுவது எனத் தெரியாமல் நிலை தடுமாறியுள்ளார் என தெரிவித்தார்.