​    ​karunas 00222

Advertisment

தலைமைச் செயலகத்தில் இன்று சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர்.

நீண்ட நேரம் நடந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

முதல்வரையும், துணை முதல்வரையும் கடுமையாக தாக்கிப் பேசி வரும் கருணாஸ் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், அதிமுக சின்னத்தில் அவர் வெற்றிப்பெற்றதால் அவரது கட்சிப் பதவியை, கட்சி தாவல் சட்டத்தின்படி பறிக்கலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க சபாநாகரிடம் கடிதம் அளிக்க உள்ளதாகவும், அதன்படி உரிய நடவடிக்கையை சபாநாயகர் எடுத்து விரைவில் கருணாஸ்க்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கருணாஸ் மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கை மற்ற எம்எல்ஏக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் ஆலோசனையில் பேசினார்களாம்.