Advertisment

காலம் தாழ்த்தி ரஜினிக்கு விருது... பரவை முனியம்மா நலமாக உள்ளார் - கருணாஸ்

உடல்நலக்குறைவு காரணமாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நடிகரும், திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் நேரில் சென்று பரவை முனியம்மாவை சந்தித்துநலம் விசாரித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

Advertisment

karunas

வேலம்மாள் குழுமம் பரவை முனியம்மாவின் முழு மருத்துவசெலவையும் ஏற்றுக்கொள்வதாக கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. நடிகர் சங்கம் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாமல் இருப்பதால் நடிகர் சங்கநிர்வாகம் முழுவதும் முடங்கி உள்ளது. தேர்தல் முடிவு பிரச்சனையால் சங்கத்தின் சார்பில் பரவை முனியம்மாவுக்கு உரிய மருத்துவ உதவிகள் செய்வதற்கு இயலாத நிலை உள்ளது.

Advertisment

நடிகர்சங்க தேர்தல் நடத்த வேண்டும் என கோரியது ஐசரி கணேசன்தான் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியிட படக்கூடாது என்று அவரேவழக்கு தொடுத்துள்ளார். இதனால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நடிகர் சங்க கட்டடங்கள் முதலானவைகள் முற்றிலும் முழுமை பெறாமல் முடக்கப்பட்டுள்ளது.

karunas

தமிழக அரசே நடிகர் சங்கத்தின் நிர்வாக பொறுப்பை ஏற்று நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது, அது ஏற்புடையதல்ல. மக்கள் பணிகளே அரசுக்கு ஏராளமாக உள்ள நிலையில் தன்னார்வ அமைப்புகளில் அரசு தலையீடு இருக்கக்கூடாது. நடிகர் சங்க விஷயங்கள் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குதெரிய வாய்ப்பில்லை. ஆனால் சில அமைச்சர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். முழுமையாக தான் எடுத்த துறையில் முழு ஈடுபாட்டுடன் திறம்பட செயல்பட்ட ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. காலம் தாழ்த்தியே கிடைக்கப் பெற்ற விருது இது என்றார்.

madurai paravai muniyamma karunas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe