ADVERTISEMENT

மேடைக்கலைஞர்களுக்கு தலா ரூ.5000 வழங்க வேண்டும்... நிவாரண உதவி அளித்து கருணாஸ், கிரேஸ் கருணாஸ் கோரிக்கை!

07:16 PM Apr 23, 2020 | rajavel

மேடை பாடகர்கள் மற்றும் மேடை கச்சேரி தொழிட்நுட்ப கலைஞர்களுக்கு நடிகர் கருணாஸ் – பாடகி கிரேஸ் கருணாஸ் கரோனா நிவாரண உதவி வழங்கினர். மேடைக்கலைஞர்களுக்கு 5000 ரூபாய் தமிழக அரசு நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT


கரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள சூழலில், மக்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. அரசு மற்றும் தன்னார்வலர்கள் என மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். பலருக்கு கிடைக்கும் நிலையும், சிலருக்கு கிடைக்காத நிலையும் இருக்கத்தான் செய்கிறது.

ADVERTISEMENT





அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் மேடை கச்சேரிகள் நடத்தி அதன் மூலம் வாழ்க்கை நடத்தி வந்த மேடைப்பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கரோனா பாதிப்பு நிலையில் எந்த நிகழ்வுகளும் இல்லாமல் முடங்கி விட்டனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிட்டது.


ஆகவே, மேடைக்கச்சேரியை தமது வாழ்க்கையின் அடித்தளமாக கொண்டு முன்னேறியவர்கள் நடிகர் கருணாஸ் மற்றும் அவரது மனைவி கிரேஸ் கருணாஸ் ஆவர். மேடைக்கச்சேரிகளில் பாடிக்கொண்டு பின்னர் படிப்படியாக திரைப்பட பாடகியாக புகழ்பெற்றவர் கிரேஸ் கருணாஸ். அதேபோல்தான் நடிகர் கருணாஸ் அவர்களும். தற்போது கருணாஸ் திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், பலபடங்களில் குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து இயங்குகிறார்!

தமது பழைய பாதையை எப்போதும் மறக்காதவர்களாய்… இருப்பதால், கரோனாவால் பாதிப்படைந்திருக்கும் மேடைக்கச்சேரிக் கலைஞர்களுக்கு நடிகர் கருணாஸ் - கிரேஸ் கருணாஸ் இருவரும் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர். அதில் முதற்கட்டமாக 500 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கியுள்ளனர்.

பி.ஆர்.ஓ. சங்கத்திற்கு நிதி உதவி அளித்தபோது



இதுபோல் தமிழ்நாடெங்கும் வாழும், நாட்டுபுற பாடகர்கள், மேடைக்கச்சேரி பாடகர்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் என 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர். அவர்களது வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இச்சூழலில் உதவவேண்டியது அரசின் கடமையாகும்.

ஒரு நாட்டின் உன்னதக் கலைஞர்களையும், அதன் பண்பாட்டு அடையாளங்களையும் அடுத்தடுத்து எடுத்து செல்கிறவர்கள் இதுபோன்ற இசைக் கலைஞர்கள் ஆவர். அவர்களை பாதுகாப்பது நமது கடமையாகும். ஆகவே அவர்களுக்கு ஆளுக்கு தலா ரூ. 5000 ஆயிரம் கரோனா நிதியாக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம் என நடிகர் கருணாஸ் – கிரேஸ் கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT