/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Karunas 601_0.jpg)
அரசு மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக திருவாடனை தொகுதி எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் கைது செய்யப்பட்டார். அவருடன் செல்வநாயகம் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் தாமோதர கிருஷ்ணனை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் சார்பில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செல்வநாயகம் என்பவரும் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.இருவரின் மனுக்களும் வரும் புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது.
கடந்த 16-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படையன் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திருவாடானை எம்எல்ஏ கருணாஸ், முதலமைச்சரை மிரட்டும் தொணியில் பேசியதாகவும், அத்துடன், காவல்துறை அதிகாரி ஒருவரிடமும் சவால் விடும் தொனியில் பேசியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கருணாஸ் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செல்வநாயகம் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)