ksa

இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. சமீப காலமாக அரசுக்கு எதிராக குற்றம் சாட்டி வந்தார். தி.மு.க. நடத்திய மாதிரி சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கூவத்தூர் பேரம் பற்றி எனக்கு தெரியும் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

Advertisment

இதனால் சட்டசபையில் பேச முன்பு போல் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் சபாநாயகரிடம் முறையிட்டபோது அரசு கொறடாவை சந்திக்குமாறு கூறினார்.

Advertisment

ஆனாலும் அவருக்கு சட்டசபையில் பேச அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த கருணாஸ், முதலமைச்சர் இருக்கை அருகே சென்று அவரிடம் தனக்கு சட்டசபையில் பேச அனுமதி தாருங்கள் என்று மெதுவாக கேட்டார். அதற்கு முதலமைச்சர், ‘ பார்க்கலாம் ’ என்று கூறிவிட்டார்.