Advertisment

எஸ்.வி. சேகர் கருத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்பந்தமில்லை - கரு.நாகராஜன் பேச்சு!

ுபர

அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள் என்று சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றில் எஸ்.வி.சேகர் கூறியிருந்தார்.

Advertisment

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதிலடி தந்தார். இதனால் கோபமான எஸ்.வி. சேகர் மீண்டும் வீடியோவில் அதிரடியாகச் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதில், "நான் ஜெயலலிதா காலில் விழுந்தவன் அல்ல. அவர் சொந்த சகோதரனைப் போல என்னைப் பார்த்துக் கொண்டார். ஒருவேளை அவர் எம்.எல்.ஏ. சம்பளத்தை வாங்காதப்பான்னு சொல்லியிருந்தால் நான் வாங்கியிருக்கப் போவதில்லை. அதை நீங்க எப்படிச் சொல்ல முடியும். அவுங்களுக்கு முன்பு நீங்க, நான் எல்லோரும் ஒரே மாதிரிதான். இப்ப எப்படித் திடீர்ன்னு நீங்க ஒரு படி மேலே ஆயிட முடியும்" என்று கோபமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் அவரின் தொடர் சர்ச்சையான பேச்சு தொடர்பாக பதிலளித்து பேசிய பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன்,"எஸ்.வி சேகர் பேச்சு என்பது அவரின் சொந்த கருத்து மட்டுமே, அதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

SV Seker
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe