Skip to main content

எஸ்.வி. சேகர் கருத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்பந்தமில்லை - கரு.நாகராஜன் பேச்சு!

Published on 08/08/2020 | Edited on 08/08/2020
ுபர

 

அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று  வையுங்கள் என்று சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றில் எஸ்.வி.சேகர் கூறியிருந்தார். 

 

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதிலடி தந்தார். இதனால் கோபமான எஸ்.வி. சேகர் மீண்டும் வீடியோவில் அதிரடியாகச் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதில், "நான் ஜெயலலிதா காலில் விழுந்தவன் அல்ல. அவர் சொந்த சகோதரனைப் போல என்னைப் பார்த்துக் கொண்டார். ஒருவேளை அவர் எம்.எல்.ஏ. சம்பளத்தை வாங்காதப்பான்னு சொல்லியிருந்தால் நான் வாங்கியிருக்கப் போவதில்லை. அதை நீங்க எப்படிச் சொல்ல முடியும். அவுங்களுக்கு முன்பு நீங்க, நான் எல்லோரும் ஒரே மாதிரிதான். இப்ப எப்படித் திடீர்ன்னு நீங்க ஒரு படி மேலே ஆயிட முடியும்" என்று கோபமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் அவரின் தொடர் சர்ச்சையான பேச்சு தொடர்பாக பதிலளித்து பேசிய பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், "எஸ்.வி சேகர் பேச்சு என்பது அவரின் சொந்த கருத்து மட்டுமே, அதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அண்ணாமலையின் பங்கு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும்” - எஸ்.வி. சேகர்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

“Annamalai's contribution will be zero” - SV Shekhar

 

அண்ணாமலையின் பங்கு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும் என எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

 

சென்னை மயிலாப்பூரில் ‘தமிழகத்தில் பிராமணர்கள் எதிர்காலம்’ என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று நேற்று(19/11/2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் ஆதரவாளரும், நடிகருமான எஸ்.வி. சேகர் கலந்துகொண்டு பேசினார். அதில், “2024 தேர்தலில் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக முழு பெரும்பான்மையுடன் மோடி பதவியில் அமருவார். ஆனால் அதற்குத் தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலையின் பங்கு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அண்ணாமலை தலைமையில் தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட பாஜக ஜெயிக்காது” எனத் தெரிவித்தார். 

 

 

Next Story

“மோடி எனது பத்தாண்டுக் கால நண்பர்; மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வருவார்” - எஸ்.வி.சேகர் பேட்டி

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

"Modi is my friend of 10 years; He will come to power with majority''-SV Shekhar interview


 

''நான் பிரதமர் மோடியுடன் 10 ஆண்டுக்காலம் நண்பராக இருந்துள்ளேன். எனவே தமிழக பாஜகவை வளர்க்க வேண்டிய கருத்துக்களை சொல்லி வருகிறேன்'' நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

 

இதற்கு முன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்திருந்த நடிகர் எஸ்.வி.சேகர், 'அதிமுக கூட்டணி தான் பாஜகவுக்கு பலம். அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் இருக்கும் பாஜக ஒரு சீட்டு கூட வெற்றி பெறாது எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.வி. சேகர், ''நான் தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என்பதற்கான கருத்துக்களை சொல்லி வருகிறேன். நான் என்ன கருத்துக்களை சொல்கிறேனோ அதை மோடி, அமித்ஷா ஆகியோருக்கு அனுப்பி வைக்கிறேன். நான் ஒன்றும் ரகசியமாக செய்யவில்லை. தமிழக பாஜக தலைவராக வரவேண்டும் என்ற ஆசை எனக்கு கிடையாது. நான் பாஜகவில் வெறும் ஒரு மிஸ்டு கால் உறுப்பினர் மாதிரி தான். ஆனால் நரேந்திர மோடியுடன் பத்தாண்டுகளுக்கு மேலாக நண்பராக இருக்கிறேன். என்னை பொறுத்தவரைக்கும் அவர் 24 மணி நேரமும் உழைத்து இந்தியாவை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் போது மாநில கட்சி அதற்குண்டான பங்களிப்பை செய்ய வேண்டும்.

 

மாநில தலைவர் தன்னை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு முயற்சியில் ஈடுபடுவதை ஒரு உண்மையான தொண்டன் யாராலும் சகித்துக் கொள்ள முடியாது. அண்ணாமலை தன்னை வளர்த்துக் கொள்வதை விட ஒன்றும் செய்யவில்லை. நடை பயணத்திற்கும் இவ்வளவு பெரிய கேரவன் வைத்த தலைவர் இவர் மட்டும்தான். ஊர் கூடித்தான் தேர் இழுக்க முடியும். நீ வேண்டாம்... நீ வேண்டாம்... நீ வேண்டாம்... என்றால் அனாதையாக தான் இருக்க வேண்டும். அதைத் தான் அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார்.

 

அவருக்கான ஒரு பத்து பேரை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார். இந்த நடைபயணத்தினால் என்ன நடக்கும். ஒரு பிரயோஜனமும் கிடையாது. டெய்லி பேப்பர்களில் அரைப்பக்கம் கால் பக்கம் அவருடைய போட்டோக்கள் வரலாம். ஒரு ஓட்டையாவது வாங்கிக் கொடுப்பதற்கான முயற்சியை செய்தால் தான் அது உண்மையான முயற்சி. இல்லை என்றால் இது எல்லாம் வெட்டி விளம்பரம் தான். நான் சொல்வதெல்லாம் சரியா தவறா என்பது ஒருவேளை அண்ணாமலை 2024ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக இருந்தால் தேர்தலின் முடிவு சொல்லிவிடும். பிரதமர் மோடி கண்டிப்பாக மூன்றாவது முறையாக மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வருவார். ஆனால் அண்ணாமலை இருக்கும் வரைக்கும் தமிழ்நாட்டின் பங்களிப்பு அதில் இருக்கவே இருக்காது. இதுதான் உண்மை'' என்றார்.