கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி; கார்த்தி சிதம்பரம் எம்.பி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Karti Chidambaram MP celebrates  Congress' victory in Karnataka by giving sweets

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறார்.

கர்நாடக மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை பரபரப்பாகவே தொடங்கியது. முதல் ஒரு மணி நேரம் காங்கிரஸ் - பாஜக சம பலத்துடன் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அடுத்தடுத்த சுற்றுவாக்கு எண்ணிக்கைகளின் முடிவுகள் வெளியாக வெளியாக சமபலத்துடன் இருந்த பாஜகவில் படிப்படியாக சரிவு ஏற்பட காங்கிரஸ் கட்சியில் முன்னேற்றம் ஏற்பட்டதைப் பார்த்து கர்நாடகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்கின்றனர்.

இதே போல புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பியும், கீரமங்கலத்தில் கார்த்தி ப.சிதம்பரம் எம்.பியும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர்.

congress karnataka
இதையும் படியுங்கள்
Subscribe