Advertisment

கார்த்திக் கோபிநாத் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

jo[p

கோயில்களைப் புனரமைப்பதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம், ஆவடிக்கு அருகே மிட்டனமல்லியில் ஸ்டூடியோ வைத்துள்ள கார்த்திக் கோபிநாத், பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் இரண்டு கோயில்களைப் புனரமைப்பதாகக் கூறி, பணம் வசூலித்து மோசடி செய்ததாக ஆவடி மத்திய குற்றப்பிரிவில் சில வாரங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஒரு கோயிலான காளியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது.

Advertisment

வசூலித்த பணத்தை ஒப்படைக்குமாறு ஏற்கனவே கார்த்திக் கோபிநாத்திற்கு மதுரை காளியம்மன் கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், பணத்தை ஒப்படைக்காததால் கோயில் நிர்வாகம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தது. இதே குற்றச்சாட்டை முன்வைத்து சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ்ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆவடியில் உள்ள வங்கிக் கணக்கின் மூலம் பணம் வசூலித்ததைகண்டுபிடித்தனர். இதையடுத்து, யூட்யூபர் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

arrest
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe