Advertisment

தீபத் திருவிழா- திருவண்ணாமலையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி டிசம்பர் 10- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு.

Advertisment

திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 1- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வரும் 14- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் 10- ஆம் தேதி 2662 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனை காண 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

karthigai deepam festival tiruvannamalai December 10th local holiday

பக்தர்களின் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதன்படி காவலர்கள் மற்றும் அதிகாரிகள் என 9,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்றும், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 21- ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ANNOUNCED collector kandhasamy local holiday karthigai deepam festival tiruvannamalai Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe