திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று மட்டும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்த்தது. ஆனால் அதை விட அதிகமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
அவர்களுக்கு 100 மீட்டருக்கு ஒருயிடத்தில் என்கிற கணக்கில் அண்ணாமலையார் பக்தர்கள், அமைப்புகள், தனியார் குழுக்கல் என பலரும் அன்னதானம் செய்தனர். பக்தர்கள் போதும், போதும் எனச்சொல்லும் அளவுக்கு பக்தர்களின் வயிற்றை நிரப்பி அனுப்பினர் அன்னதான குழுவினர்.