கார்த்தி சிதம்பரம் மற்றும் அவருடைய மனைவி ஸ்ரீநிதி மீது சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கு 27-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

karthi chidambaram income tax chennai high court

சென்னை முட்டுகாட்டில் உள்ள தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை அக்னி எஸ்டேட் பவுண்டேசன் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததில் 7 கோடியே 73 லட்ச ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்ததாக, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவருடைய மனைவி ஸ்ரீநிதி மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

Advertisment

இந்த வழக்கில், குற்றச்சாட்டு பதிவிற்காக இருவரையும் இன்று ஆஜாராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குற்றச்சாட்டு பதிவிற்கு 27-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.