கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 2.40 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கபினி மற்றும் கே.எஸ்.ஆர் உள்ளிட்ட அணைகள் நிரம்பிய நிலையில், காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று வினாடிக்கு 2.25 கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2.40 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
அதில் கபினி அணையில் இருந்து 1.20 லட்சம் கனஅடியும் , கேஎஸ்ஆர் அணையில் இருந்து 1.20 லட்சம் கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளதால், கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. கர்நாடக அணைகளில் நீர்திறப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.