காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.எஸ்.ஆர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன்படி இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,200ல் இருந்து 8,400 கனஅடியாக அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettur dam images_0.jpg)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.33 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 14.99 டி.எம்.சி ஆகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அதே போல் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வரும் நாட்களில் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us