சிதம்பரத்தில் பலியான கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நபர்

Karnataka government bus driver passed away in chidambaram

கர்நாடகா மாநிலம், சாம்ராட் நகர் மாவட்டம், கொள்ளேகால் பகுதியில் வசித்து வந்தவர் சிவராஜ் (40). இவர், கர்நாடகா மாநில அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 50 பேரை அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.

அதேபோல், அவர்கள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோவில்களைப் பார்வையிடத்திட்டமிட்டு, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று இரவு வந்துள்ளனர். இந்நிலையில், பேருந்து ஓட்டுநர் சிவராஜ் பேருந்தில் வந்தவர்களை இறக்கிவிட்டு, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையில் தூங்கியுள்ளார்.

அதிகாலையில் பேருந்தில் ஏறியவர்கள் ஓட்டுநரை எழுப்பியபோது அவர் மயக்கம் அடைந்த நிலையிலேயேஇருந்துள்ளதால் காவல்துறையினருக்குத்தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்களின்பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து சிதம்பரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chidambaram karnataka police
இதையும் படியுங்கள்
Subscribe