கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 45,668 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35,000 கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 10,668 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.