Skip to main content

ஈரோடு ரயிலில் துணிகரம்; 2 பெண் பயணிகளிடம் தங்கச் செயினை பறித்து  ஓடிய மர்ம நபர்கள்

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

 

கர்நாடக மாநிலம்,  உடுப்பி மாவட்டம்,  கடபாடி அடுத்த மூடபெட்டு பகுதியை  சேர்ந்தவர் சதீஷ்.  இவரது மனைவி  ராஜேஸ்வரி தனது குடும்பத்தினருடன் ரேணிகுண்டாவில் இருந்து திருப்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில்  எஸ்- 5 என்ற முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.  அப்போது ராஜேஸ்வரி ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து வந்தார்.

 

t

 

இந்நிலையில் அந்த எக்ஸ்பிரஸ்  ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு முன்பாக சிக்னலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.   அந்த நேரத்தில்  மர்ம நபர் ஒருவர் ராஜேஸ்வரி அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினன், 2 தங்க மோதிரம் என மொத்தம் ரூ. 2 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார். 


அதே போன்று அதே எஸ்- 5 பெட்டியில் பயணம்  செய்த ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த பெருந்தலையூர் பகுதியைச் சேர்ந்த  செந்தில்குமார் மனைவி தேவி   என்பவரிடமும் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் நகையையும்  கண்'இமைக்கும் நேரத்தில் மர்ம நபர் பறித்துக் கொண்டு ஓடினார்.    இதுகுறித்து நகையை பறிகொடுத்த இரு பெண் பயணிகளும் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்