Skip to main content

கார்கில் வீர மேஜர் சரவணன் 25 ஆம் ஆண்டு நினைவு விழா!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
Kargil War Major Saravanan 25th Anniversary Celebration

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்துவிட்டு பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீர மரணம் அடைந்தவர் திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன்.

அவரது வீர தீர செயல்களைப் பாராட்டி இந்திய அரசு பாட்டலிக்கின்  கதாநாயகன் என்றும் நம் நாட்டின் உயரிய விருதான வீர் சக்கரா என்ற விருதையும் வழங்கி கௌரவித்தது. அவரது 25 ஆம் ஆண்டு நினைவு விழாவை முன்னிட்டு அவரது நினைவகத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்ய மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை சார்பாக இன்று அரசியல் பிரமுகர்கள், ராணுவ மற்றும் மாநில உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் அமைச்சர் நேரு, மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல்துறை ஆணையர் காமினி, திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன், திருச்சி ஸ்டேஷன் கமாண்டர் கர்னல் சுதீப் சட்டர்ஜ், திருச்சி என்சிசி குரூப் கமாண்டர் கர்னல் சுனில் பட், மதுரை ஹச்பிசிஎல் விற்பனை மேலாளர் தீரஜ் முரளி, திருச்சி புனித வளனார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியசாமி சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார் செய்திருந்தார்

சார்ந்த செய்திகள்