Advertisment

'பாலியல் புகாரில் கராத்தே பயிற்சியாளர் கைது!'

Advertisment

தற்காப்பு கலைப் பயிற்சிக்கு வந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஜூடோ மற்றும் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீது சென்னை அண்ணாநகரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், போட்டிக்காக நாமக்கல் சென்று திரும்பும்போது காரில் பாலியல் தொல்லை தந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தப்புகாரை விசாரித்த காவல்துறையினர், கெபிராஜ் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். அதைத் தொடர்ந்து, கெபிராஜை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதனிடையே, பாலியல் வழக்கில் சிறையில் உள்ள ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது போக்சோ நீதிமன்றம்.

anna nagar Chennai police
இதையும் படியுங்கள்
Subscribe