Advertisment

நள்ளிரவில் இளைஞர் படுகொலை!! CCTV காட்சியை வைத்து கொலையாளிகளை பிடிக்க போலீஸ் முயற்சி...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையம் எதிரில் வசித்து வருபவர்கள் ஆறுமுகம், பஞ்சவர்ணம் சகோதரர்கள். இதில் தம்பி பஞ்சவர்ணம் காரைக்குடி அரசு மதுபான பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதத்துக்கு முன்பு அவர் வேலையில் இருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு பஞ்சவர்ணத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதனால் பஞ்சவர்ணம் வீட்டை விட்டு வெளியே வந்து, மரத்தடியில் நின்று போன் பேசி உள்ளார்.

Advertisment

karaikudi incident

அப்போது அவரிடம் ஒருவர் வந்து பேச்சு கொடுத்துள்ளார். அப்போது அந்த இடத்திற்கு காரில் வந்த நபர் பஞ்சவர்ணத்தை ஓட, ஓட அறிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் பஞ்சவர்ணத்தை காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோத்த மருத்துவர்கள் பஞ்சவர்ணம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் உள்ள CCTV கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் பதிவான காட்சிகளை வைத்து அழகப்பாபுரம் காவல்துறையினர் கொலையாளிகளை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் .

incident Karaikudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe