தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்  பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்மனார் கோவிலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் செயலாளரான மணிமாறன் என்பவர் கொடூரமான முறையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முன்னதாக இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற 4 மாவட்ட நிர்வாகிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்று விட்டு மாலை 03.30 மணியளவில் மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். 

அப்போது செம்மனார்கோவில் தனியார் பள்ளி முன்பு சென்று கொண்டிருந்தபோது 2 கார்களில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து நிறுத்தி காரின் கதவுகளை உடைத்து காரிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்ற அவரை காரில் வந்த ஏழுக்கு மேற்பட்ட மர்ம நபர்கள் கொடூரமான ஆயுதங்களால் முகத்தில் பல்வேறு இடங்களில் தாக்கி கொலை செய்துவிட்டனர் இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட நபர் காரைக்கால் மாவட்டத்தின் பா.ம.க மாவட்டச் செயலளராக இருந்த தேவமணியின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.